ஓம் சிவமயம்

எல்லாஞ்சிவம

 

அப்பனும் அம்மையுஞ் சிவமே

அரிய சகோதரருஞ் சிவமே

ஒப்பில் மனைவியுஞ் சிவமே

ஓதரும் மைந்தருஞ் சிவமே

செப்பில் அரசருஞ் சிவமே

தேவாதி தேவருஞ் சிவமே

இப்புவி யெல்லாஞ் சிவமே

என்னை யாண்டதுஞ் சிவமேமங்களம் ஜெய மங்களம்


அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் ஜெய மங்களம்

அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஜெய மங்களம்

ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் ஜெய மங்களம்

உத்தம பத்தருக்கு மங்களம் ஜெய மங்களம்

முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் ஜெய மங்களம்

மூவாசை வென்றவர்க்கு மங்களம் ஜெய மங்களம்

முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம்

முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் ஜெய மங்களம்

தன்னைத்தன்னா லறிந்தவர்க்கும் மங்களம் ஜெய மங்களம்

ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஜெய மங்களம்

ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஜெய மங்களம்

ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம்

சீர்காழித் தேவருக்கு மங்களம் ஜெய மங்களம்

திருநாவுக் கரசருக்கு மங்களம் ஜெய மங்களம்

சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் ஜெய மங்களம்

திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் ஜெய மங்களம்

எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம் ஜெய மங்களம்


This rare photo of the venerable Sage Yogaswami was taken hours before his cremation on 24 March 1964கேட்க:
மங்களம் ஜெய மங்களம் பாடியவர்: திருமதி அருந்ததி சிறீரங்கநாதன்

 

Yogaswami's Main Page Next

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top